Skip to main content
1800 696 784
1800 696 784

National Relay Service
Interpreter: 13 14 50
Open 9am-5pm Mon to Fri (closed public holidays)

[email protected]
For emergencies, please call 000

கருத்தடை, திட்டமிடப்படாத கர்ப்பத்தை எதிர்கொள்ளும் முறைகள் அல்லது பாலியல் சுகாதாரம் பற்றிய தகவல்களை நீங்கள் தேடுகின்றீர்களா?

நாம் யார்

நாம் விக்டோரியாவில் அமைந்துள்ள ஒரு சுயாதீனமான தொலைபேசி இணைப்பு மற்றும் இணையத்தளம் ஆகும். எமது இலவசசேவையானது, அந்தரங்கமானதும்  அபிப்பிராயம் கொள்வதைத் தவிர்ப்பதுமாகும். கர்ப்பத்தைத் தொடர்வதா கருக்கலைப்பு செய்வதா எனத்தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது என நாமும் நம்புகிறோம்.

எமக்குவரும் அனைத்துத் தொலைப்பேசி அழைப்புகளையும் பெண்களே ஏற்கின்றார்கள். அத்துடன், எம்முடைய அனைத்து மொழிபெயர்ப்பாளார்களும் பெண்களே ஆவர். மேலும், நீங்கள் விரும்பிக்கேட்டால் எங்களால் முடிந்தவரை பெண் மருத்துவர்களை உங்களுக்காகத் தேடித்தருவோம்.

நாம் வழங்குவது:

நாம் மருத்துவ, சட்ட அல்லது நிதி அறிவுரை அல்லது ஆலோசனை வழங்குவதில்லை.

எப்படி எம்மால் உதவ முடியும்

உங்கள் இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதாரத் தேவைகள் மற்றும் உங்களுக்குப் பொருத்தமான சேவைகளைக் கண்டுபிடிப்பது பற்றி எமது தொலைபேசிப் பணியாளர்கள் உங்களுடன் பேசமுடியும்.
எம்மிடம் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளில் உள்ளடக்குவன:

விக்டோரியாவில் உள்ள பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய மற்றும் எமது இணைத்தளத்தின் ஊடாக நீங்கள் தகவல்களைத் தேடக்கூடிய நிகழ்நிலைத் தகவல்தளமும் (online database) எம்மிடம் உள்ளது

எமது நிபுணத்துவம்

நாம் விக்டோரியா எங்கும் நூற்றுக்கணக்கான சேவைகளுடன் கூட்டாக வேலை செய்கின்றோம் (பொது மருத்துவர்கள் (GPs), சமூக சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளடங்கலாக) – உங்கள் தேவைகளுக்கு மிகப் பொருத்தமான சேவைகளைத் தேடித்தருவதற்காக.
நாம் வழங்கும் தகவல்கள் இன்றைய தேதிக்கு மிகவும் புதிதாகக் கிடைக்கும்  நிபுணத்துவ ஆய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை.

தேடுவது இலகுவானது

1800 My Options இணைத்தளமானது நீங்கள் இயன்றளவு நேரத்தை செலவிட்டு சேவைகளைத் தேட உங்களுக்கு இடமளிக்கும். கருத்தடை மற்றும் கருக்கலைப்புச் சேவை வழங்குனர்கள், நேரடியற்ற கருத்தரிப்பு வழிகள் பற்றிய ஆலோசகர்கள் போன்ற சேவைகள் மற்றும் மருந்தகங்கள் போன்றவற்றை நீங்கள் தேடமுடியும்.

எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்:

1800 My Options, பெண்களின் சுகாதாரம் விக்டோரியா (Women’s Health Victoria) வின் ஒரு சேவையாகும், விக்டோரிய அரசால் நிதியளிக்கப்படுவது.

English translation

Are you looking for information about contraception, unplanned pregnancy options or sexual health?

Who we are
We are an independent phone line and website based in Victoria. Our service is confidential, free, non-judgemental and pro-choice. Our phone line is staffed by women. If you prefer, we can always try to link you with female health workers.

We provide:

We do not provide medical, legal or financial advice or counselling.

How we can help
Our phone workers can speak to you about your reproductive and sexual health needs, and find services that suit you.
Questions we are commonly asked include:

We also have an online database of sexual and reproductive health services in Victoria that you can search via our website.

Our Expertise
We work in partnership with hundreds of services across Victoria (including GPs, community health centres, hospitals and pharmacies) – to find the services that best meet your needs. The information we provide is based on the most up-to-date evidence.

Searching is easy
The 1800 My Options website lets you search for services in your own time. You can search for
services such as contraception and abortion providers, non-directive pregnancy options counsellors and pharmacies.

Contact us:
Phone: 1800 696 784

Email: [email protected]

1800 My Options is a service of Women’s Health Victoria, funded by the Victorian Government.